< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"விரைவில் ஆவின் குடிநீர்" - பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்
|19 Aug 2022 7:18 PM IST
ஆவின் குடிநீர் விற்பனை குறித்து முதல் அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.
சென்னை,
சென்னை நந்தனத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ஆவின் குடிநீர் பற்றிய தகவல்களை கூறினார். ஆவின் குடிநீர் விற்பனை குறித்து முதல் அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.
மேலும், பால் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அமைச்சர், கூடுதல் விலைக்கு பால் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.