சேலம்
குழாய் உடைப்பால் வீணாகிய குடிநீர்
|ஓமலூர் பகுதியில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணானது.
ஓமலூர்:
ஓமலூர் அருகே கோட்ட மேட்டுப்பட்டி ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள மேட்டூர் குடிநீர் குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் குடிநீர் வீணாக பெருக்கெடுத்து ஓடியது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேச்சேரி- ஓமலூர் 4 வழி சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் குடிநீர் குழாய் மாற்றும் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை மேச்சேரி அருகே காமனேரி பகுதியில் ஓமலூருக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாய் திடீரென உடைந்தது. இதனால் சுமார் 50 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக குடிநீர் நிறுத்தப்பட்டது.