விழுப்புரம்
ஜானகிபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டி
|ஜானகிபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டி லட்சுமணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமானடி ஊராட்சி ஜானகிபுரம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சிறு மின் விசைப்பம்புடன் கூடிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.லட்சுமணன் கலந்துகொண்டு குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதில் கோலியனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், ஒன்றிய கவுன்சிலர் ஆதிலட்சுமி காசிநாதன், மாவட்ட கவுன்சிலர் வனிதாஹரிராமன், நகராட்சி கவுன்சிலர் மணவாளன், ஊராட்சி தலைவர் வீரா ஏழுமலை, துணைத்தலைவர் ராஜா, கிளை செயலாளர்கள் ரவி, பிரபு, சிட்டிபாபு, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.