< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பெரம்பலூரில் மேலும் 4 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து
|2 Oct 2023 12:00 AM IST
பெரம்பலூரில் மேலும் 4 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சிக்கு காவிரி குடிநீர் வழங்கும் காவிரி கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக திருச்சி நெம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 29-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை குடிநீர் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடையாததால் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 6-ந்தேதி வரை 4 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனை பெரம்பலூர் நகர பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளுமாறு பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.