< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
குடிநீர், கழிவுநீரகற்று கட்டணம்: காலதாமதத்துக்கான மேல் வரி குறைப்பு - குடிநீர் வாரியம் தகவல்
|25 Jun 2023 3:47 PM IST
குடிநீர், கழிவுநீரகற்று கட்டணம்: காலதாமதத்துக்கான மேல் வரி குறைப்பு வரும் ஜூலை 1-ந்தேதியில் இருந்து 1 சதவீதமாக குறைக்க சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவு நீரகற்று வரியை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோருக்கு மாதத்துக்கு 1.25 என்ற சதவீதத்தில் மேல் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு இந்த மேல்வரி வரும் ஜூலை 1-ந்தேதியில் இருந்து 1 சதவீதமாக குறைக்க சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது.எனவே, நுகர்வோர்கள் சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை உரிய காலத்துக்குள் செலுத்தி வாரியத்தின் வளர்ச்சிப்பணிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.