< Back
மாநில செய்திகள்
ரூ.8 லட்சத்தில் குடிநீர் திட்டப் பணிகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ரூ.8 லட்சத்தில் குடிநீர் திட்டப் பணிகள்

தினத்தந்தி
|
13 Jun 2022 11:52 PM IST

கல்வராயன்மலையில் ரூ.8 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலையில் மேல்பாச்சேரி ஊராட்சி எழுத்தூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உதயசூரியன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.8 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் புதிதாக மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி மற்றும் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி மற்றும் குழாய் அமைப்பதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர் அலமேலு சின்னத்தம்பி, உதவிபொறியாளர் அருண் ராஜா, வடக்கனந்தல் பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அர்ச்சனா லட்சுமணன், சீனுவாசன், செல்வராஜ், சித்ரா சந்திரவேல், ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, மேல்பாச்சேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன், ஊரக வளர்ச்சி பணி மேற்பார்வையாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்