< Back
மாநில செய்திகள்
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
திருச்சி
மாநில செய்திகள்

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

தினத்தந்தி
|
7 Aug 2022 7:23 PM GMT

குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகிறது.

மணப்பாறை:

மணப்பாறை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள மக்களின் குடிநீர் தேவை, காவிரி குடிநீர் மூலமாகவே நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை காவிரி குடிநீர் ஒவ்வொரு பகுதிக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இதில் பள்ளமான பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு இருக்காது. ஆனால் மேடான பகுதியில் வசிக்கும் மக்கள் குழாய் இருந்தும் காவிரி குடிநீர் கிடைக்காமல், குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் மணப்பாறையில் உள்ள மதுரை ரோட்டில் காவிரி குடிநீர் குழாயில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறுகிறது. நேற்று 3-வது நாளாக காவிரி குடிநீர் வெளியேறி வீணானது. பிரதான சாலையில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் யாருக்கும் பயனின்றி சென்று, கழிவுநீர் கால்வாயில் கலக்கும் நிலை உள்ளது.நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையில் நகராட்சிக்கு எதிரே லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக செல்லும் நிலையில், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. எனவே அதிகாரிகள் குழாய் உடைப்பை விரைந்து சரி செய்து மக்களுக்கு சரியான அளவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்