< Back
மாநில செய்திகள்
பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள்

தினத்தந்தி
|
26 Oct 2023 12:54 AM IST

திசையன்விளையில் குலசை பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.

இட்டமொழி:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு திசையன்விளை சுடலையாண்டவர் கோவில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் கோவில் பகுதியில் வைத்து ராதாபுரம் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி விஜயாபதி ஏ.ஆர்.ரஹ்மான் 50 ஆயிரம் பக்தர்களுக்கு தனது சொந்த செலவில் உணவுப்பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பக்தர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்