< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
|11 Dec 2022 2:32 AM IST
தற்கொலை
ஈரோடு கருங்கல்பாளையம் இந்திராநகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55). தொழிலாளி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் கொங்கலம்மன் கோவில் வீதிக்கு அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்தார். பின்னர் மயங்கி விழுந்து கிடந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.