திருவாரூர்
வாய்க்கால் தூர்வாரும் பணி
|நீடாமங்கலம் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
நீடாமங்கலம்:-
காவிரி டெல்டா பாசன சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் தஞ்சை கீழ் காவிரி வடிநில வட்டம் சார்பில் 115 பணிகள் 1008.56 கி.மீ தொலைவுக்கு நடந்து வருகிறது. இதில் வெண்ணாறு வடிநில கோட்டத்தை சேர்ந்த நீடாமங்கலம் பகுதிகளில் நடந்து வரும் கொண்டியாறு வாய்க்கால் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களை தூர்வாரும் பணியை கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்ததுடன், பணிகளை விரைந்து முடிக்க நீர்வளத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஆய்வின் போது திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கனகரெத்தினம், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் தியாகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமாறன், அன்பழகன், ஊராட்சி தலைவர்கள் குணசீலன், பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.