< Back
மாநில செய்திகள்
5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியை.. குமரியில் பரபரப்பு
மாநில செய்திகள்

5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியை.. குமரியில் பரபரப்பு

தினத்தந்தி
|
12 Aug 2024 6:58 PM IST

5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

குமரி,

குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரக பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஒரு தம்பதியின் 5 வயது மகள் யு.கே.ஜி. படித்து வந்தாள். சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் மிகவும் சோர்வாக வீட்டுக்கு திரும்பினார். இதை கண்ட தாயார் அவரிடம் இதுபற்றி விசாரித்தார். அப்போது அவர் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதாவது பள்ளியில் உள்ள ஓவிய ஆசிரியை ஒரு அறைக்கு அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும் அவள் அந்தரங்க உறுப்பு வலிக்கிறது என கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் உடனே பாறசாலை அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவியை அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

மேலும் இதுகுறித்து சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தனியார் பள்ளியின் ஓவிய ஆசிரியையான ஐஸ்வர்யா(26) என்பவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்