< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்கவே முடியாது' - அமைச்சர் எ.வ.வேலு
|15 Dec 2023 10:35 PM IST
திராவிட மாடல் ஆட்சியில் ஆன்மீகத்திற்கு அதிகமான பங்கு உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனி- தாராபுரம் இருவழி சாலையினை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணியின் துவக்க விழாவில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசியபோது அவர் கூறியதாவது;-
"திராவிட மாடல் ஆட்சியில் ஆன்மீகத்திற்கு அதிகமான பங்கு உள்ளது. திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மீகத்தையும் இனி பிரித்துப் பார்க்கவே முடியாது. திராவிடத்திற்குள்தான் ஆன்மீகம் இருக்கிறது. பழனி- தாராபுரம் இருவழி சாலையினை அரசு நான்கு வழி சாலையாக அகலப்படுத்துகிறது. இந்த சாலை பழனிக்குச் செல்லும் பக்தர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாலையாக உள்ளது."
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.