< Back
மாநில செய்திகள்
மத்திய பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூகஅநீதியை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
மாநில செய்திகள்

மத்திய பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூகஅநீதியை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
13 Aug 2023 5:00 AM IST

மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூகஅநீதியை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன் வரவேற்று பேசினார். பிரசார செயலாளர் அருள்மொழி கண்டன உரையாற்றினார்.

இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, கி.வீரமணி நிருபர்களிடம் கூறுகையில், 'மத்திய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர், துணை பேராசியர் இடங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் உள்ள 45 பல்கலைக்கழகங்களில் 7 இடங்கள் மட்டும்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பா.ஜ.க. ஆட்சியில் சமூக நீதி ஒழிக்கப்பட்டு வருகிறது. அரசியல் சட்ட அமைப்பில் சமூக நீதி என்பது முதலாவதாக குறிப்பிடப்படும். ஆனால், அதை மத்திய அரசு கடைபிடிப்பது இல்லை. ஆர்.எஸ்.எஸ். உத்தரவையே செயல்படுத்தி வருகிறார்கள்' என்று குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகள்