திருநெல்வேலி
திராவிடர் கழகம் சார்பில் முப்பெரும் விழா
|சேரன்மாதேவியில் திராவிடர் கழகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா, தி.மு.க அறச்செம்மல் பத்தமடை பரமசிவத்திற்கு பாராட்டு விழா மற்றும் தாய் வீட்டில் கலைஞர் நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே நடந்தது. விழாவிற்கு திராவிட கழக மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். தி.மு.க நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான், பத்தமடை பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தி.மு.க. மாவட்ட அவை தலைவர் கிரகாம்பெல், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி என்ற பிரபு (கிழக்கு), முத்துகிருஷ்ணன் (மேற்கு), சேரன்மாதேவி நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செல்வ சூடாமணி, மாவட்ட பிரதிநிதி வக்கீல் சரவண மணிமாறன், கோபாலசமுத்திரம் பேரூராட்சி தலைவர் தமயந்தி, நகர செயலாளர்கள் மேலச்செவல் மணிகண்டன், வீரவநல்லூர் சுப்பையா, கூனியூர் பஞ்சாயத்து தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் திராவிடர் கழக, தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.