< Back
மாநில செய்திகள்
திராவிட மாடல் பயிற்சி பட்டறை
விழுப்புரம்
மாநில செய்திகள்

திராவிட மாடல் பயிற்சி பட்டறை

தினத்தந்தி
|
17 July 2022 10:21 PM IST

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பட்டறையை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

விக்கிரவாண்டி.,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி .விக்கிரவாண்டியில் நடந்தது. இதற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ், பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணிதுணை அமைப்பாளர் பாலாஜி வரவேற்றார். பிரசார குழு செயலாளர் வக்கீல் அருள்மொழி, லெனின் ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு திராவிட மாடல் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாவட்ட துணை செயலாளர் முருகன், ஒன்றியக்குழு தலைவர்கள் சங்கீதஅரசிரவிதுரை, கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, கல்பட்டுராஜா, மும்மூர்த்தி, முருகன், ஜெயபால், காணை முருகன், நகர செயலாளர் நைனாமுகமது மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்