< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில் திருக்கல்யாணம்
|6 July 2023 2:46 AM IST
சோழவந்தான் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி அர்ஜூனன், திரவுபதி அலங்காரமாகி கோவிலை வலம் வந்தனர். மேளதாளத்துடன் மாப்பிள்ளை, பெண் அழைப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து யாக பூஜை நடைபெற்று தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோவில் அர்ச்சகர் நாகேஸ்வரசிவம் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டார் கார்த்திகேயன் ஆகிய இருவரும் அர்ஜூனன்-திரவுபதி திருமணத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.