< Back
மாநில செய்திகள்
அரியலூரில் இன்று திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
அரியலூர்
மாநில செய்திகள்

அரியலூரில் இன்று திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
3 March 2023 2:13 AM IST

அரியலூர் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயராமபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், முருகன், மகா மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி நேற்று காலை விநாயகர் பூஜை, எஜமான் சங்கல்பம், புன்யாகவாஜனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, மகாதீபாராதனை நடைபெற்றது. மாலை விநாயகர் வழிபாடு, மிருத்சங்கிரஹனம், அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடக்கிறது. அதன்பிறகு காலை 9.15 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று 9.30 மணிக்குள் விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து காலை 9.50 மணிக்கு திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகமும், காலை 10.30 மணிக்கு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. இதனை சிவஸ்ரீ அசோக் ஜி தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தி வைக்கிறார்கள். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், நாட்டாமைகள் மற்றும் ஜெயராமபுரம் 5-வது வார்டு உறுப்பினர் கர்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்