< Back
மாநில செய்திகள்
காட்டு யானை தாக்கியதாக நாடகம்
நீலகிரி
மாநில செய்திகள்

காட்டு யானை தாக்கியதாக நாடகம்

தினத்தந்தி
|
9 July 2023 3:00 AM IST

தேவர்சோலை அருகே கீழே விழுந்து காயமடைந்த வாலிபர், காட்டு யானை தாக்கியதாக நாடகம் ஆடினார்.

கூடலூர்

கூடலூர் அருகே தேவர்சோலை அருகே உட் பிரையர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனது நண்பர்களுடன் தேவர்சோலை பஜாரில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த சமயத்தில் காட்டு யானை தாக்கியதாக கூறி காயத்துடன் சங்கரை அவரது நண்பர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதை அறிந்த கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் தேவர்சோலை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அரசு டாக்டர் பரிசோதனை செய்ததில் காட்டு யானை தாக்கிய அறிகுறி எதுவும் தெரியவில்லை. விசாரணையில் காட்டு யானையை கண்டு சங்கர் பயத்தில் ஓடிய போது, தவறி கீழே விழுந்து காயம் அடைந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார், வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானை தாக்கியதாக தவறான தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் காட்டு யானையை கண்டு வாலிபர் சங்கர் பயத்தில் ஓடிய போது கீழே விழுந்து காயம் அடைந்து உள்ளது தெரியவந்தது. ஏற்கனவே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வேலைகளை முடித்துக் கொண்டு விரைவாக வீடு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்