< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி
|30 April 2023 12:15 AM IST
திருப்புகலூர் ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி நெய்குன்னத்தில் உள்ள கீழவேலி வடிகால் வாய்க்கால், தோட்டக்குடி, ஆதினங்குடி வடிகால் வாய்க்கால் ஆகியவை ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில் திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் கலந்து கொண்டு தூர்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் உதவிசெயற்பொறியாளர் செங்கல்வராயன், திருமருகல் உதவி பொறியாளர்கள் சரவணன், செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், ஊராட்சி செயலாளர் ஜெயசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.