< Back
மாநில செய்திகள்
நெல்லிக்குப்பம் நகராட்சியில்    வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்
கடலூர்
மாநில செய்திகள்

நெல்லிக்குப்பம் நகராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

தினத்தந்தி
|
20 July 2022 10:25 PM IST

நெல்லிக்குப்பம் நகராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கியது.


நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்காக ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க நிகழ்ச்சி காமராஜர் நகர், அவுலியா நகர் ஆகிய பகுதிகளில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் வாய்க்கால்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆணையாளர் பார்த்தசாரதி கூறுகையில், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வடிகால் வாய்க்கால் மற்றும் நெல்லிக்குப்பத்தான், வெள்ளப்பாக்கத்தான் வாய்க்கால்களில் படர்ந்து கிடக்கும் முட்செடிகள், குப்பை அடைப்புகளை தூர்வாரிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது நகராட்சி பொறியாளர் பாண்டு, துப்புரவு அலுவலர் சக்திவேல், பணி மேற்பார்வையாளர் வாசு, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்