< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
ரூ.9¾ லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணி
|26 Oct 2023 12:45 AM IST
சிங்காநல்லூரில் ரூ.9¾ லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணியை அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர் ஊராட்சியில் சிறுபாலத்துடன் கூடிய வடிகால் அமைக்க வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 82 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணிகளை தொடங்கிவைத்தார். பின்னர் அவர்கள் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்கவும், அதே நேரத்தில் தரமானதாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக் அப்புசாமி, ஜி.கே.சுந்தரம், மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்வேல், நிர்வாகிகள் கார்த்திகேயன், வேலுச்சாமி, சுப்பிரமணியம், கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.