< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாநில கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை; தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தீவிரம்
|25 Oct 2023 10:49 PM IST
மாநில கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை,
தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் அடங்கிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி மாநில கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்ட இந்த வரைவு அறிக்கையை தமிழில் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வரைவு அறிக்கை இன்னும் ஒரு மாத காலத்தில் முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.