< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில்சிவந்தி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில்ஆதித்தனார் கல்லூரி வெற்றி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில்சிவந்தி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில்ஆதித்தனார் கல்லூரி வெற்றி

தினத்தந்தி
|
12 Oct 2023 12:15 AM IST

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சிவந்தி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஆதித்தனார் கல்லூரி வெற்றி பெற்றது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான சிவந்தி கோப்பைக்கான கபடி, வாலிபால், கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் நடந்தது. பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் வரவேற்று பேசினார். உதவி பேராசிரியர் கணேஷ் சிறப்பு விருந்தினரை அறிமுக உரையாற்றினார். நெல்லை மண்டல தமிழ்நாடு மின்சார வாரிய முதன்மை விளையாட்டு வாரிய அதிகாரி மற்றும் அர்ஜீனா விருது பெற்ற முன்னாள் இந்திய கபடி வீரர் மணத்தி கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக உதவி பேராசிரியர்கள் நெல்சன்துரை, ஆபிரகாம் சாம்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

பள்ளிகளுக்கு நடந்த கபடி போட்டியில் நாசரேத் மர்க்காசிஸ் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மற்றும் மெஞ்ஞானபுரம் ஆம்ப்ரூஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் 3-ம் இடத்தையும் பெற்றன. வாலிபால் போட்டியில் மணப்பாடு செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், பெரியதாழை லிட்டில் ப்ளவர் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பெற்றன.

அதேபோல், கல்லூரிகளுக்கு இடையிலான நடந்த கிரிக்கெட் போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல் இடத்தையும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் 2-ம் இடத்தையும் பெற்றன. கால்பந்து போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல் இடத்தையும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி 2-ம் இடத்தையும், நாசரேத் மர்க்காசிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 3-ம் இடத்தையும் பெற்றன.

நிகழ்ச்சியில், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட், ராஜாசிங் ரோக்லாண்ட், விளையாட்டு வீரர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்