< Back
மாநில செய்திகள்
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி மைய நிறைவு விழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி மைய நிறைவு விழா

தினத்தந்தி
|
15 July 2023 12:15 AM IST

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி மைய நிறைவு விழா நடந்தது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மைத்துறை மாணவர் மன்றம் 'ஷேர்' அமைப்பு மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சி மையம் ஆகியவற்றின் நிறைவு விழா நடந்தது. இதன் சார்பாக மேலாண்மை துறை மாணவர்களுக்கு சிறப்பு சொற்பொழிவு நடத்தப்பட்டது. மேலாண்மை துறை தலைவர் அமிர்தகவுரி வரவேற்று பேசினார். தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான மேலாண்மை துறை மாணவ மன்ற நிறைவு விழா நடந்தது. மேலாண்மை துறை துணை பேராசிரியை நளினி கடந்த ஆண்டில் நடைபெற்ற மன்ற நடவடிக்கைகள் குறித்து பேசினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வாழ்த்தி பேசினார்.

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் காயத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'வணிக யோசனை மற்றும் வணிக மாதிரி தயாரித்தல்' என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலாண்மை துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி சிவகவுதமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, மேலாண்மை துறைத்தலைவர் அமிர்தகவுரி வழிகாட்டுதலின்பேரில், மன்ற ஒருங்கிணைப்பாளர் மெர்லின் சித்ரா செல்வி மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்