தூத்துக்குடி
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
|திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டப்பட்டது.
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் தேசிய ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் பொ.சுவாமிதாஸ் வாழ்த்தி பேசினார். மாணவி அருணா கலைவாணி வரவேற்றார். குலசேகரன்பட்டினம் பி.எஸ்.எம். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், சிறந்த நல்லாசிரியர் விருது பெற்றவரும், ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவருமான எஸ்.சுபாஷ் சந்திரபோஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி உதவி பேராசிரியை உமா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் உதவி பேராசிரியை வசந்தி வினோலியா மற்றும் மாணவிகள் செய்திருந்தனர். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. உதவி பேராசிரியை சுஜாவதி தனிப்பாடல் பாடினார்.
இக்கல்லூரியில் 2023-2024-ம் ஆண்டிற்கான பி.எட். சேர்க்கை நடைபெறுகிறது. மிக குறைந்த இடங்களே உள்ளன. பி.எட். பட்டப்படிப்பில் கணிதவியல், பொருளறிவியல், உயிரறிவியல், பொருளியல், வணிகவியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் உள்ளன. பி.எட். வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.drsacedn.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது நேரில் அனைத்து சான்றிதழ்களுடன் வந்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04639- 220577, 9042282412 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் பொ.சுவாமிதாஸ் தெரிவித்துள்ளார்.