< Back
மாநில செய்திகள்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மலர் தூவி மரியாதை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மலர் தூவி மரியாதை

தினத்தந்தி
|
25 Sept 2022 12:15 AM IST

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


'பத்மஸ்ரீ' டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்த நாளையொட்டி நாகை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் நாகை புதிய கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 150 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. நாகை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் 'பத்மஸ்ரீ' டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நாகை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், புதுச்சேரி மாவட்ட செயலாளர் பெர்லின் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப் படத்துக்கு கைப்பந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், ரோஸி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்