< Back
மாநில செய்திகள்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தினத்தந்தி
|
31 July 2023 12:00 AM IST

பிறந்தநாளையொட்டி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இவர் இந்தியாவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர், இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்த்திருத்த பெண் மருத்துவர் ஆவார். இவரது 138-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கலெக்டர் மெர்சி ரம்யா மாலை அணிவித்து, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அங்குள்ள பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில், முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜ்மோகன், ஆர்.டி.ஓ. முருகேசன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணை தலைவர் லியாகத்அலி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் இந்திராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்