< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு, ஆ.ராசா அவசர ஆலோசனை
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு, ஆ.ராசா அவசர ஆலோசனை

தினத்தந்தி
|
14 Jun 2023 9:13 AM IST

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சரின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைப்பெற்று வருகிறது.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.

அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி இன்னும் மயக்க நிலையில் தான் உள்ளார். செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்ட போது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. தற்போது உடல்நிலை சீராக உள்ளது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என ஓமந்துராரர் அரசு மருத்துவர்கள் தெரிவித்தாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சரின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைப்பெற்று வருகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சந்தித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும், நீதிமன்றத்தை அணுகுவது குறித்தும் ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்