விழுப்புரம்
டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனைவி காயமின்றி உயிர் தப்பினார்
|திண்டிவனம் அருகே விபத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனைவி காயமின்றி உயிர் தப்பினார்
திண்டிவனம்
பா.ம.க. மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா சம்பவத்தன்று தீபாவளியை கொண்டாடுவதற்காக ஒரு காரில் சென்னையில் இருந்து திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு புறப்பட்டார். திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாதிரி கிராமம் மெயின் ரோடு பகுதி சாலையோர டீக்கடையில் இருந்து கார் ஒன்று திடீரென புறவழிச்சாலையில் ஏறியது. அந்த சமயத்தில் சென்னையில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக வந்த காரை ஓட்டி வந்தவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது பின்னால் சவுமியா அன்புமணி வந்த கார் உள்பட 5 கார்கள் புறவழிச்சாலையில் ஏறிய கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால், அடுத்தடுத்து ஒன்றன்மீது ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சிக்கிய 5 கார்களும் லேசான சேதமடைந்தது. காரில் வந்த சவுமியா அன்புமணி ராமதாஸ் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் விபத்தில் சிக்கியதால் சவுமியா அன்புமணி ராமதாஸ் மாற்று கார் மூலம் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றார். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.