வரதட்சணை கொடுமை: குழந்தையுடன் பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது
|தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வரதராஜன் என்பவர் மகன் குமார் (வயது 30). வேலூரில் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரவீனா கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி தனது ஒரு வயது பெண் குழந்தையை இடுப்பில் கட்டிக்கொண்டு விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில் ஆண்டுகளே ஆனதால் பிரவீனா தற்கொலை செய்ததால் அது குறித்து வேலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இதில் பிரவீனாவை அவரது கணவர் குமார் மற்றும் மாமியார் ஆகியோர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மனம் உடைந்து போன பிரவீனா தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து குமாரை கைது செய்யுமாறு வேலூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக குமாரை பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்தார்.