சென்னை
காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்... குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு போலீசார் அறிவுரை
|காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்... என குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.
சென்னையில் பொதுமக்கள்- போலீஸ் துறை நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது கலந்தாய்வு கூட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் 57 இடங்களில் குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், குடியிருப்புக்குள் சந்தேகத்துக்குரிய நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ, குற்றச்சம்பவங்கள், சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் கிடைத்தாலோ உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உள்பட பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகள், ஆலோசனைகளை போலீசார் வழங்கினார்கள்.
அவசர உதவிக்காக 60-க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள காவல் உதவி செயலியை (ஆப்) தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு அவசர உதவிக்கு போலீஸ்துறையை நாடலாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர். இந்த கூட்டத்தில் குடியிருப்போர் சங்கங்களை சேர்ந்த 1,627 பேர் பங்கேற்றனர்.