< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
சூறைக்காற்றில் சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பிகள்
|24 July 2023 12:15 AM IST
குளச்சலில் சூறைக்காற்றில் சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பிகள்
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் 14-வது அன்பியத்தை சேர்ந்தவர் டார்வின் (வயது50), மீனவர். இவருடைய தம்பி மகேஷ் என்பவரின் படகை அதே பகுதியைச் சேர்ந்த அமலதாஸ் மகன் அமலநாதன் (30) என்பவர் திருடியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. சம்பவத்தன்று டார்வின் கடைக்குச் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ததேயுஸ்(49), அவரது மனைவி மல்லிகா (44) ஆகியோர் சேர்ந்து டார்வினை தடுத்து நிறுத்தி எங்களது மருமகன் அமலாநாதன் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறக்கோரி தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து டார்வின் கொடுத்த புகாரின் பேரில் ததேயுஸ், அவரது மனைவி மல்லிகா ஆகிய 2 பேர் மீது கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.