< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
ராமேசுவரம் மீன்பிடி படகில் வந்து அமர்ந்த புறா
|20 April 2023 12:15 AM IST
ராமேசுவரம் மீன்பிடி படகில் வந்து புறாஅமர்ந்தது.
ராமேசுவரத்திலிருந்து கடந்த 15-ம் தேதி நாட்டு படக்கு ஒன்றில் 5 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பறந்து வந்த புறா ஒன்று திடீரென படகில் வந்து அமர்ந்தது. அந்த புறாவை படகில் இருந்த மீனவர் ரகு என்பவர் எடுத்து வந்து தனது வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் புறாவின் காலில் சுதன் யாழ்ப்பாணம் என்று எழுதப்பட்டிருந்தை பார்த்தார். இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் பந்தயத்திற்காக பறக்க விடப்பட்ட புறா திசை மாறி நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த படகில் வந்து அமர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து உளவு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.