< Back
மாநில செய்திகள்
இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணி: அந்தியோதயா, இண்டர்சிட்டி ரெயில்கள் சேவையில் மாற்றம்
மாநில செய்திகள்

இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணி: அந்தியோதயா, இண்டர்சிட்டி ரெயில்கள் சேவையில் மாற்றம்

தினத்தந்தி
|
17 March 2023 12:24 PM GMT

இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணி காரணமாக அந்தியோதயா, இண்டர்சிட்டி ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

திருவனந்தபுரம் கோட்டத்தில் மேலப்பாளை யம்-நாங்குநேரி இடையே இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் தாம்பரத்தில் இருந்து நாளை (18-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை புறப்படும் நாகர்கோவில் அந்தியோதயா ரெயில் (20691) மற்றும் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா ரெயில் (20692) ஆகியவை நெல்லை- நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும்.

அதேபோல திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி விரைவு ரெயில்கள் (22627/22628) இரு மார்க்கங்களிலும் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். திருவனந்த புரம் இண்டர்சிட்டி ரெயில் நெல்லையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும்.

அதேபோல வருகிற 22-ந்தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை விரைவு ரெயில் (22657) மற்றும் நாகர்கோவிலில் இருந்து வருகிற 23-ந்தேதிபுறப்படும். தாம்பரம் வாரம் மும்முறை சேவை ரெயில் (22658) ஆகியவை விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும்.

இதேபோல சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 23-ந்தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12667) மற்றும் வருகிற 24-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய எழும்பூர் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12668) ஆகியவை விருதுநகரில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்