திருப்பூர்
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
|வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
பல்லடம்
பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் வசிப்பவர் சுந்தரலிங்கம் மகன் சிவரஞ்சன் (வயது44). இவர் திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள தனியார் பனியன் சாயமிடும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை கணவன்- மனைவி இருவரும் வேலைக்குச்சென்றுவிட்டனர். வேலை முடிந்து மாலை திரும்பி வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவுக்குள் வைத்திருந்த தங்கச்சங்கிலி, வளையல், மோதிரம் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகள், மற்றும் ரூ.7 ஆயிரம் திருட்டுப்போய் இருந்தது. இதையடுத்து சிவரஞ்சன் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டுப்போன சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.