"மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட கூடாது" - போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை
|அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மது போதையில் பணியில் ஈடுபடக்கூடாது என்று, அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,
அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மது போதையில் பணியில் ஈடுபடக்கூடாது என்று, அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சமீப காலமாக ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சிலர் மது அருந்திவிட்டு பணிபுரிவதாக புகார் பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும் என்றும், இதனால் பொதுமக்களுக்கு நம்பிக்கை குறைந்து அரசுப் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மது அருந்திய நிலையில், பணிபுரியக் கூடாது எனவும், கண்டுபிடிக்கப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.