< Back
மாநில செய்திகள்
மாநில அரசுகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் கவர்னர் பதவி தேவையில்லை: ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
மாநில செய்திகள்

மாநில அரசுகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் கவர்னர் பதவி தேவையில்லை: ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

தினத்தந்தி
|
18 Dec 2022 3:27 AM IST

மாநில அரசுகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் கவர்னர் பதவி தேவையில்லை என்று ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

ம.தி.மு.க. மாணவர் அணி மாநில துணைச்செயலாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள், மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில மாணவர் அணி செயலாளர் பால சசிகுமார் தலைமை தாங்கினார். இதில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தொடக்க உரையாற்றினார். தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னர்கள் தங்கள் விருப்பம்போல் ஆட்டிப்படைக்க முனைவதும், மாநில அரசுகள் விரும்புகின்ற வகையில் நடந்துகொள்ள வேண்டிய கவர்னர்கள் தங்கள் நடவடிக்கைகளில் அத்துமீறி நடந்து கொள்வது கூட்டாட்சித் தத்துவத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதையும் தகர்க்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் மாநில கவர்னர் பொறுப்புகள் தேவையில்லை என்பதை அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் மூலம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசையும், அனைத்து கட்சிகளையும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்