< Back
மாநில செய்திகள்
இந்தி தெரியாது போடா- பாஜக தேசிய தலைமை எக்ஸ் பதிவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்
மாநில செய்திகள்

இந்தி தெரியாது போடா- பாஜக தேசிய தலைமை எக்ஸ் பதிவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்

தினத்தந்தி
|
22 Jan 2024 10:03 AM GMT

மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழா குறித்து கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராமர் கோவில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால்தான் அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேசிய பாஜகவின் எக்ஸ் தளத்தில் நேற்று உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை பதிவிட்டு, இந்த அநியாயக்காரர்களை அடையாளம் காணுங்கள். ராமர் கோவிலை எதிர்த்து, சனாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள் என்று இந்தியில் பதிவிட்டிருந்தனர்.

பாஜகவின் இந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, 'இந்தி தெரியாது போடா' என்ற வசனம் உள்ள டி-சர்ட் அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்