< Back
மாநில செய்திகள்
சிக்கன், மட்டன் வாங்க காசு இல்லையா..? - இஎம்ஐ முறையில் விற்பனை செய்யும் கோவை கடைக்காரர்
மாநில செய்திகள்

சிக்கன், மட்டன் வாங்க காசு இல்லையா..? - இஎம்ஐ முறையில் விற்பனை செய்யும் கோவை கடைக்காரர்

தினத்தந்தி
|
21 April 2023 12:25 PM IST

கோவையில் தவணைத் திட்டம் மூலமாக, மட்டன், சிக்கன் வாங்கிக் கொள்ளலாம் என்று இறைச்சிக் கடை வெளியிட்டுள்ள அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை,

கோவையில் தவணைத் திட்டம் மூலமாக, மட்டன், சிக்கன் வாங்கிக் கொள்ளலாம் என்று இறைச்சிக் கடை வெளியிட்டுள்ள அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர், அப்பகுதியில் சிக்கன் மற்றும் மட்டன் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவர், டிவி, ஏசி, வாஷிங் மிஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை இஎம்ஐ முறையில் விற்பனை செய்வதுபோல், தனது கடையில் இருந்து சிக்கன், மட்டன் ஆகியவற்றை இஎம்ஐ முறையில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளார்.

வீட்டு விஷேசங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இறைச்சி வாங்கும்போது மூன்று மாதங்கள், 6 மாதங்கள், 9 மாதங்கள், 12 மாதங்கள் என தவணை முறையில் பணம் வசூலித்து வருகிறார்கள். இஎம்ஐ முறையில் கொஞ்சம் கூடுதல் செலவானாலும், பொதுமக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்