< Back
மாநில செய்திகள்
புதிய ஆட்டோவுக்கு அனுமதி வழங்கக்கூடாது-டிரைவர்கள் கோரிக்கை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

புதிய ஆட்டோவுக்கு அனுமதி வழங்கக்கூடாது-டிரைவர்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
29 Sept 2023 1:25 AM IST

புதிய ஆட்டோவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சி.ஐ.டி.யு.வின் அனைத்து வகையான ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் பழைய பஸ் நிலைய கிளை கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், சி.ஐ.டி.யு. சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பெரம்பலூர் நகர் பகுதி போக்குவரத்து நெருக்கடியில் உள்ள நிலையில், ஏற்கனவே இயங்கி வரும் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தில் புதிய ஆட்டோவுக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஆன்லைன் அபராதம் நடவடிக்கையை கைவிட வேண்டும், ஆட்டோ நிறுத்தத்திற்கு இடத்தை உறுதிப்படுத்திட வேண்டும். வங்கி மூலம் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்