< Back
மாநில செய்திகள்
காதலனை ஒன்றும் செய்ய வேண்டாம்...! உருக்கமாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்
சென்னை
மாநில செய்திகள்

காதலனை ஒன்றும் செய்ய வேண்டாம்...! உருக்கமாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்

தினத்தந்தி
|
11 Oct 2022 11:12 AM IST

சென்னையில் 5 வருடங்களாகக் காதலித்து வந்த காதலன் ஏமாற்றியதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை, சின்னமாத்தூர், பாரதி நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் டேனியல் ராஜா. இவருடைய மகள் ஏஞ்சல்(வயது 23). இவர், மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.

இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ்(24) என்பவரை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் தனுஷ், ஏஞ்சலை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ஏஞ்சல், நேற்று முன்தனம் இரவு தனது வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், தூக்கில் தொங்கிய ஏஞ்சலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முன்பு ஏஞ்சல் செல்போனில் எடுத்த வீடியோ ஒன்றை கண்டுபிடித்தனர்.

அதில், "தன்னுடைய தற்கொலைக்கு நானே காரணம். காதல் தோல்வியால் தனது காதலனை மறக்க முடியவில்லை . அதனால்தான் இந்த முடிவை நான் எடுக்கிறேன். இதற்காகத் தனது காதலனை ஒன்றும் செய்ய வேண்டாம்" என கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தங்கள் மகள் தற்கொலைக்கு காரணமான தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்