அவசியமின்றி வெளியே வர வேண்டாம்... வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக் போலீசார் அறிவுரை
|அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை,
தீவிர புயலாக நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது. புயலாக வலுவிழந்த மாண்டஸ் சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. மாண்டஸ் புயல் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 85கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில், அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்துக் காவலர்கள் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைப் பதிவில்,
மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்று போக்குவரத்துக் காவல்துறைச் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவசியமின்றி வெளியே வர வண்டாம், பாதுகாப்பாக மக்கள் பயணம் மேற்கொள்ளுமாறும் போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
அவ்வாறு சாலையில் செல்லும் போது மழைக்காக ஒதுங்க நேரிட்டால் மரங்கள், பழுதடைந்தக் கட்டடங்கள் விளம்பர போர்டுகள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் கீழ் ஒதுங்குவதைத் தவிர்க்கவும்.
பொதுமக்களின் நலனுக்காக:
அவசியத் தேவைகளுக்கானப் பயணம் மேற்கொள்பவர்கள் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் குடை உபயோகிப்பதைத் தவிர்த்து ரெயின் கோட் அணியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.