< Back
மாநில செய்திகள்
விற்பனை உரிமம் பெறாதவர்களிடம் விதைகள் வாங்க வேண்டாம்
விருதுநகர்
மாநில செய்திகள்

விற்பனை உரிமம் பெறாதவர்களிடம் விதைகள் வாங்க வேண்டாம்

தினத்தந்தி
|
14 Jun 2023 1:51 AM IST

விற்பனை உரிமம் பெறாதவர்களிடம் விதைகள் வாங்க வேண்டாம் என விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா எச்சரித்துள்ளார்.


விற்பனை உரிமம் பெறாதவர்களிடம் விதைகள் வாங்க வேண்டாம் என விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா எச்சரித்துள்ளார்.

விதைப்பு பருவம்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தற்போது விதைப்பு பருவத்தில் மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி, கம்பு, நெல் பயிரிடும் விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள விதை விற்பனை உரிமம் பெற்ற அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும்.

விதை உரிமம் பெறாத விற்பனையாளர்களிடம் விதைகளை வாங்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. விவசாயிகள் விதைகளை வாங்கும் போது மறக்காமல் விலை பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். மேலும் விதைச்சட்டம் 1966-ல் குறிப்பிட்ட 14 காரணிகளும் அட்டையில் குறிப்பிட்ப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னரே வாங்க வேண்டும்.

நடவடிக்கை

மேலும் விதை விற்பனையாளர்கள் உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தாலோ, விற்பனை பட்டியல் இல்லாமல் விற்பனை செய்தாலும், போலி விதைகளை விற்பனை செய்தாலும் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

மத்திய அரசு வீரிய பருவத்தில் காய்ப்புழு எதிர்ப்பு சக்தி உடைய பருத்திபிடி விதைகளை மட்டுமே விற்பனைக்கும் சாகுபடிக்கும் அனுமதி வழங்கி உள்ளது. பருத்தியில் களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி உடைய மரபணுமாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ அனுமதி வழங்கப்படவில்லை.

சட்டப்படி குற்றம்

இதற்கு மாறாக மத்திய அரசினால் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி உடைய பருத்தி சாகுபடி செய்வதோ, விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றமாகும். இதனை மீறுபவர்கள் மீது விதை கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பழக்கன்று, தென்னை மற்றும் நாற்றங்கால் விற்பனை செய்யும் நர்சரி உரிமையாளர்கள் தவறாமல் விதை விற்பனை உரிமம் பெற்று இருக்க வேண்டும். உரிமம் இல்லாமல் விதை விற்பனை மற்றும் நர்சரி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்