< Back
மாநில செய்திகள்
75 மாணவ-மாணவிகள் ரத்ததானம்
சிவகங்கை
மாநில செய்திகள்

75 மாணவ-மாணவிகள் ரத்ததானம்

தினத்தந்தி
|
14 Aug 2022 11:40 PM IST

75 மாணவ-மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.

இளையான்குடி,

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், சாலைக்கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி ஆகியவை சார்பில் 75-வது சுதந்திரதினவிழாவை ரத்தம் வழங்கி கொண்டாடினர். இதை யொட்டி நடந்த ரத்ததான முகாமிற்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்துகொண்டு ரத்ததானம் செய்தார். இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் 75 பேர் கலந்து கொண்டு தானாக முன்வந்து ரத்ததானம் செய்தனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் மற்றும் இளையோர் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்