< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
விபத்தில் இறந்த பெண்ணின் கண்கள் தானம்
|5 April 2023 12:15 AM IST
விபத்தில் இறந்த பெண்ணின் கண்கள் தானம் செய்யப்பட்டது
சிவகங்கை,
சிவகங்கை அடுத்த ராகினிப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி மகள் கங்கா (வயது 24). நர்சிங் படிப்பு முடித்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று அவர் அரசு பஸ்சில் வேலைக்கு சென்றார். குயவன்குளம் அருகே சென்றபோது அரசு பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கங்கா உள்பட பஸ்சில் பயணம் செய்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த கங்காவின் உடல் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கங்காவின் தந்தை முத்துப்பாண்டி கங்காவின் இரு கண்களையும் அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்குவதாக எழுதிக்கொடுத்தார். இதனை தொடர்ந்து உடனடியாக கங்காவின் கண்கள் அறுவை சிகிச்சை மூலம் தானமாக பெறப்பட்டது.