< Back
மாநில செய்திகள்
நாய்கள் பிடிக்கும் பணி
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

நாய்கள் பிடிக்கும் பணி

தினத்தந்தி
|
30 Sep 2023 6:45 PM GMT

சீர்காழி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை நகராட்சியினர் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீர்காழி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை நகராட்சியினர் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள்

சீர்காழி நகராட்சிக்குட்பட்ட தென்பாதி, மாரிமுத்து நகர், மயிலாடுதுறை ரோடு, புதிய பஸ் நிலையம், அகர திருக்கோலக்கா தெரு, பழைய பஸ் நிலையம், திருக்கோலக்கா தெரு, ெரயில்வே ரோடு, கோவில்பத்து, தாடாளன் கோவில், பள்ளிவாசல் தெரு, சிதம்பரம் சாலை, கோவிந்தராஜ் நகர், மேல மாரியம்மன் கோவில், தெரு கீழ மாரியம்மன் கோவில் தெரு, ஈசானிய தெரு, கீழத்தென்பாதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை கடித்து துன்புறுத்தி வருகிறது.

எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என சீர்காழி நகர் பகுதி மக்கள் சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோருக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

நாய்கள் பிடிக்கப்பட்டன

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரில் சீர்காழி நகராட்சி பணியாளர்கள் மற்றும் நாய்பிடிக்கும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் உதவியோடு சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து வாகனத்தில் அடைத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சீர்காழி நகர் பகுதியில் ஏராளமான நாய்கள் உள்ளன. முதல் கட்டமாக 50 நாய்களை பிடித்த நகராட்சிக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம். வரும் காலங்களில் மீதமுள்ள அனைத்து நாய்களையும் பிடித்து கருத்தடை செய்தால் சீர்காழி நகர் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகளுக்கும் தெருவாசிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

மேலும் செய்திகள்