< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
வெறிநாய்கள் கடித்து 3 பேர் படுகாயம்
|8 Dec 2022 12:15 AM IST
வெறிநாய்கள் கடித்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இளையான்குடி,
இளையான்குடி பகுதிகளில் வெறி நாய்கள் அதிக அளவில் ெதருக்களில் சுற்றி திரிகின்றன. அவைகள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சர்க்கரை அம்பலம் தெருவை சேர்ந்த ஹசினாள் பீவி (வயது 60), மும்தாஜ்(45), காந்தி சாலையை சேர்ந்த பாலு(50) ஆகியோரை வெறிநாய்கள் கடித்து குதறியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். வெறிநாய்கள் அட்டகாசத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெருவில் செல்லவே அச்சம் அடைந்துள்ளனர். மேலும் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.