< Back
மாநில செய்திகள்
உடன்குடியில் நாய்களுக்கான ஓட்டப்பந்தய போட்டி - 32 நாய்கள் பங்கேற்பு
மாநில செய்திகள்

உடன்குடியில் நாய்களுக்கான ஓட்டப்பந்தய போட்டி - 32 நாய்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
17 July 2022 2:51 PM IST

உடன்குடி அருகே கடாசபுரத்தில் நாய்களுக்கான ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கடாசபுரத்தில் நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் திசையன்விளை, திருத்துறைபூண்டி, ஒட்டன்சத்திரம், கரூர், தஞ்சாவூர் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து 32 நாய்கள் கலந்து கொண்டது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

இதில் திருச்செந்தூர் அரசு வழக்கறிஞர் சாத்ராக், காயாமொழி திருமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். விடுமுறை நாளான இன்று சுற்றுபுறபகுதியில் இருந்து ஏராளமான கிராம மக்கள் இந்த போட்டிகளை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்