< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பாதிப்பு
|6 May 2023 12:15 AM IST
நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பாதிக்கப்பட்டார்.
சாயல்குடி,
சாயல்குடி பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் கம்பெனியில் வட மாநில தொழிலாளி ஒருவர் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் சாயல்குடி பகுதியில் இரவில் நடந்து சென்றபோது தெருநாய் அவரை கடித்து குதறியுள்ளது. ஆனால் அவர் முறையான சிகிச்சைக்கு செல்லாமல் இருந்துள்ளார். நாளடைவில் அவரது செயலில் மாற்றம் கண்ட அப்பகுதியினர் அவரை தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அந்த வடமாநில தொழிலாளி நாய் செய்யும் செயல்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.