< Back
மாநில செய்திகள்
அம்பேத்கரிடம் இருந்து தொடங்குகிறதா விஜய் அரசியல்..?
மாநில செய்திகள்

அம்பேத்கரிடம் இருந்து தொடங்குகிறதா விஜய் அரசியல்..?

தினத்தந்தி
|
13 April 2023 11:47 AM IST

அம்பேத்கர் பிறந்தநாளை விஜய் மக்கள் இயக்கம் நாளை விமர்சையாக கொண்டாடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

தளபதி விஜய் மக்கள் இயக்கம் தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது. தனி கொடியுடன் சுயேட்சையாக களம் இறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றனர். ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இதனை தொடர்ந்து அண்மையில் விஜய் மக்கள் இயக்கம், தமிழகத்தில் மாவட்டம்தோறும் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனைக்கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்தது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த உத்தேசிக்கப்பட்டது.

இந்த நிலையில், அம்பேத்கரின் 13-வது பிறந்தநாளை விஜய் மக்கள் இயக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) விமர்சையாக கொண்டாடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் உருவப்படத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவாக்க அம்பேத்கரிடம் இருந்து தனது அரசியல் பணியை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.




மேலும் செய்திகள்